Monday, January 4, 2010

நிலைக்கொள்ளாமை...

ஒன்றை உறுதியாக தீர்மாணிது
முடிவுசெய்யும் போதே
அது மிகவும் குழப்பமானதாகி விடுகிறது,
மீளாத குழப்பத்தில் புதைந்துகொண்டிருக்கும் போதே
அதை உறுதியாக தீர்மாணிது
முடிவு செய்துவிடுகிறேன்,

எவற்றின் மீதும் நம்பிக்கையோடும்
நம்பிக்கையற்றும் அதற்கிடையிலும் கூட
இருக்கமுடியவில்லை,

எல்லாவற்றிலும் சீக்கிரமாகவே
சலிப்படைந்து விடுகிறேன்,

எல்லாவற்றிலிருந்தும் தொடர்பறுந்து
தனியாக திரிந்துகொண்டிருக்கிறேன்,
பிரபஞ்சவெளியில் எவ்விசையிலும்
சிக்காமல் திரியும் அபூர்வ நட்சதிரம் போல,

மிகவும் தீவிரமாக யோசிதுக்கொண்டிருக்கிறேன்
எதை அறிவதற்காக இந்த
நிலைக்கொள்ளாமல் அலைவுறும் உன்மத்தமம்...

1 comment:

  1. ஒன்றை உறுதியாக //தீர்மாணிது//
    மிகவும் தீவிரமாக //யோசிதுக்கொண்டிருக்கிறேன்//

    தமிழ் ஒரு இனிய மொழி.

    அழுத்தமான வார்த்தை பிரயோகங்கள் தேவை இல்லை என்பதற்கு

    உங்கள் கவிதையே உள்ளங்கை நெல்லிக்கனி!!!!!!!

    ReplyDelete